Tuesday, January 12, 2021
Home தமிழகம் புதுவையில் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க திட்டம்

புதுவையில் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க திட்டம்

முதலமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தில் இருந்து நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தின் போது இலவச அரிசிக்கான பணம் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி சிவப்பு நிற ரே‌‌ஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை 5 மாதத்திற்கான அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கார்டு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் பிப்ரவரி மாத நிலுவை தொகையான ரூ.400 ஆகியவற்றை சேர்த்து தலா ரூ.3 ஆயிரத்து 400 வழங்கவும், மஞ்சள் நிற கார்டுதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் நவம்பர் வரை 4 மாதத்திற்கு கார்டு ஒன்றுக்கு ரூ.1,200, மே மாத நிலுவைத் தொகை ரூ.100 சேர்த்து கார்டு ஒன்றுக்கு ரூ.1,300 வழங்குவதற்கு மொத்தம் ரூ.79 கோடியே 46 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்து கவர்னர் கிரண்பேடிக்கு டிசம்பர் 2-ந் தேதி அனுப்பப்பட்டது.

இதில் சிவப்பு நிற கார்டு தாரர்களுக்கு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம், மஞ்சள் நிற கார்டு தாரர்களுக்கு ரூ.ஆயிரமும் வழங்க ரூ.53 கோடியே 88 லட்சத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

மஞ்சள் நிற கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.ஆயிரம் வழங்குவதற்கான ஒப்புதலின் போது கவர்னர் விதித்த சில தேவையற்ற நிபந்தனைகள் காரணமாக அரிசிக்கான பணம் பயனாளிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையால் இதுவரை வழங்கப்பட இயலவில்லை.

எனவே மஞ்சள் நிற கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.ஆயிரம் உடனடியாக வழங்கவேண்டும் என்று குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு துறை அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டார்.

அதன்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே புதுச்சேரி மாநில அரசின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டும், கவர்னரின் நடவடிக்கைகளையும் பரிசீலித்து ரேஷன்கார்டுக்கு தலா ரூ.1,000 வீதம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று கோப்பு தயார் செய்து துறையின் அமைச்சர் கந்தசாமி பரிந்துரையின் பேரில் தலைமை செயலர் அஸ்வனிகுமார் சார்பில் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி இந்தியாவில் மேலும் 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,79,179- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 167 பேர் பலியான...

வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்படும் போது ஒரு வருப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வழிகாட்டு...

பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி – யூடியூப் சேனலைச் சேர்ந்த 3 பேர் கைது

சில யூடியூப் சேனல்கள் "மக்கள் கருத்து" என்ற பெயரில் பொது இடங்களில் மக்களிடம் கேள்வி கேட்டு, அதை வைரல் வீடியோவாக்கி வருகின்றனர். வைரலாக வேண்டும் என்பதற்காக சில கேள்விகள் தரம் தாழ்ந்தும் செல்கிறது. இது...

410 நாடுகளின் கரன்சி நோட்டுகளை சேகரித்து சென்னையை சேர்ந்த இளைஞர் உலக சாதனை

சென்னையை சேர்ந்தவர் அண்ணாமலை ராஜேந்திரன், 34, இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் கரன்சி தாள்களை சேகரித்து வந்துள்ளார். இதனை இன்று சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார்...

Recent Comments