Friday, February 26, 2021
Home இந்தியா பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரிமூலம் 20 லட்சம் கோடி மத்திய அரசு வசூலித்துள்ளது -...

பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரிமூலம் 20 லட்சம் கோடி மத்திய அரசு வசூலித்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் 20 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

உயர்த்தப்பட்ட இந்த மோடி வரியைக் குறைத்தால் பெட்ரோல் விலை 62 ரூபாயாகவும், டீசல் விலை 47 ரூபாயாக குறையும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதன் மூலம் உயர்ந்து வரும் விலைவாசியும் பெருமளவுக்குக் குறையும் என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன்கேரா தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 108 டாலருக்கு விற்கப்பட்டது. அப்போது பெட்ரோல் விலை 71 ரூபாய் 51 காசுகளாகவும், டீசல் விலை 57 ரூபாய் 28 காசுகளாகவும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 56 டாலராக இருக்கும் போது பேட்ரோல் விலை நூறு ரூபாயை நெறுங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். 2016 ஆம் ஆண்டு பெட்ரோல் மீது ரூ.19.73 விதிக்கப்பட்ட கலால் வரியை மத்திய அரசு இன்று ரூ.32 98 காசுகளாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

அம்மா அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசுவது போன்ற தொழில்நுட்பம்

சென்னையில் கட்டப்பட்டுள்ள அம்மா அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசுவது போன்ற தொழில்நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அமைக்கப்பட்ட தனி அரங்கில் நாம் பட்டனை அழுத்தி கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்வது...

பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரிமூலம் 20 லட்சம் கோடி மத்திய அரசு வசூலித்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் 20 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்...

தேர்தல் நேரத்தில் கிரண்பேடியை மாற்றியிருப்பது கண் துடைப்பு நாடகம் – மு.க. ஸ்டாலின்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் காலதாமதமான நடவடிக்கை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு...

கிரண்பேடிக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது – நாராயணசாமி

புதுச்சேரி கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம். கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தை தீவிரப்படுத்தினோம் புதுச்சேரி மாநில மக்களின் உரிமை காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றி புதுச்சேரி மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி...

Recent Comments