சூரியனில் ‘ஓம்’ என்ற சத்தம் கேட்பதை நாசா ரெகார்ட் செய்துள்ளதாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ட்வீட் செய்திருப்பது பெரும் கேலிக்குள்ளாகி உள்ளது.
இது தொடர்பாக ஒரு சிறு காணொளியை ட்வீட் செய்திருந்தார் கிரண் பேடி. 1:50 நிமிடங்கள் கொண்ட அந்தக் காணொளியில் சூரியனின் படம், ஓம், சிவனின் படங்கள் எல்லாம் போட்டு ஓம் என்ற ஒலியோடு பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த ஒலியை நாசாவே ரெகார்ட் செய்ததாகவும் அதில் போடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து NASA என்ற ஹாஷ்டகை ட்விட்டர்வாசிகள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். கிரண் பேடி பதிவிட்ட காணொளியும் மிகுந்த கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.