கார்டூமி
சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள அல்-குரேஷி என்ற தேசிய வனவிலங்கு பூங்காவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் எலும்பும் தோலுமாக இருக்கும் ஆப்பிரிக்க சிங்கங்களை காப்பாற்ற உதவ வேண்டும் என ஆன்லைனில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்களை பார்த்து கண் கலங்காதவர்களே இல்லை. அந்த அளவுக்கு சிங்கங்கள் மோசமாக காணப்படுகிறது. பல நாள் சாப்பிடாமல், உணவும் கிடைக்காமல் சிங்கங்கள் பார்க்கவே மோசமாக இருக்கின்றன. ஆனால் சூடான் அரசோ அங்குள்ள மக்களுக்கே உணவு அளிக்க வசதி இல்லை.
சிங்கங்கள் உணவு இல்லாமல் அவதிப்படும் புகைப்படங்களை பார்த்த பலர் இந்தச் சிங்கங்களுக்குப் பாதுகாப்பான நல்ல வசதியுடன் கூடிய வேறு இடம் தேவை என சமூகவலைதளத்தில் குரலெழுப்பி வருகின்றனர்.
#SudanAnimalRescue என்ற ஹாஸ்டேக் உலகம் முழுவதும் பரவி வருகிறது. சூடான் சிங்கங்களுக்கு மக்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனிடையே தற்போதைய நிலையில் சிங்கத்தை அந்த பூங்காவில் உள்ள ஊழியர்கள் தங்களால் முடிந்த உணவு கொடுத்து காப்பாற்ற முயன்று வருகிறார்கள்.
இது தொடர்பாக பூங்கா அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கூறியது:
கடந்த சில வாரங்களாக சிங்கங்களின் நிலை மோசமடைந்துள்ளதாகவும், சிலர் உடலில் மூன்றில் இரண்டு பங்கு எடையை இழந்ததாகவும் வேதனை தெரிவித்தனர்.