Tuesday, December 6, 2022
Home வர்த்தகம் சென்னையில் பெட்ரோல் 18 காசுகள், டீசல் விலை 20 காசுகள் குறைவு

சென்னையில் பெட்ரோல் 18 காசுகள், டீசல் விலை 20 காசுகள் குறைவு

சென்னை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.77.72க்கும், டீசல் ரூ.71.90க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

கடந்த இரு நாட்களாக ஒரே விலையில் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று குறைந்துள்ளது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து ரூ.77.54க்கும், டீசல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.71.70க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

- Advertisment -

Most Popular

சென்னை விமான நிலையத்தில் 2,150 கார்களை நிறுத்த வசதி – செயல்பாட்டுக்கு வந்தது

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கார் பார்க்கிங் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள், 400...

இந்திய அணியின் வெற்றியை தடுத்த கே.எல்.ராகுலின் மிஸ்ஸிங் கேட்ச்

டாக்கா இந்தியா, வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 46...

விழிப்புணர்வு குறும்படம் – வீடு வீடாக குப்பை சேகரிக்கும் நடிகர் யோகி பாபு

சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நடிகர் யோகி பாபுவை தூய்மைப் பணியாளராக நடிக்க வைத்து குறும்படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. இதில், தூய்மைப் பணியாளர்...

மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம் – அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம்

விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் சனிக்கிழமை (நவ.19) அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த...

Recent Comments