விண்வெளியில் 328 நாட்கள் தங்கிய அமெரிக்க விண்வெளி வீராங்கனை, இன்று பத்திரமாக பூமி திரும்பினார். கிறிஸ்டினா கோச், என்ற அமெரிக்க வீராங்கனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்வெளி சென்றார். அங்குள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆய்வை மேற்கொண்ட கிறிஸ்டினா, இன்று கஜகஸ்தானில் பத்திரமாக தரை இறங்கினார். அவருடன் மற்ற 2 வீரர்களும் பூமி திரும்பினர். விண்வெளியில் இருந்த போது, SPACE WALK சென்ற முதல் வீராங்கனை, அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டினா கோச் படைத்துள்ளார்.