Tuesday, September 10, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாநான் தனி ஆள் இல்ல - சொல்லாமல் சொல்லி ட்விட்டரை தெறிக்கவிட்ட விஜய்

நான் தனி ஆள் இல்ல – சொல்லாமல் சொல்லி ட்விட்டரை தெறிக்கவிட்ட விஜய்

நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிந்துவிட்டது. படப்பிடிப்பு சத்தமில்லாமல் தான் நடந்தது. ஆனால் வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை நடத்தியதுடன், படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவரை விசாரித்தனர். இதையடுத்து தான் அனைவரின் கவனமும் நெய்வேலி பக்கம் திரும்பியது.

படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்தார். அந்த செல்ஃபியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தான் தனி ஆள் இல்லை, தனக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது என்பதை விஜய் சொல்லாமல் சொல்லத் தான் இந்த செல்ஃபியை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. என் மிகப் பெரிய சொத்தே என் ரசிகர்கள் தான் என்பார் விஜய்.

அந்த சொத்து விபரத்தை ட்விட்டரில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். தற்போது பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரும் அந்த செல்ஃபியை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் செல்ஃபி வெளியிட்ட வேகத்தில் அதை போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டார்கள் ரசிகர்கள்.

விஜய்யின் அரசியல் ஆசையை அழிக்கத் தான் இந்த வருமான வரி சோதனை, ஷூட்டிங்ஸ்பாட்டில் போராட்டம் என்று பேச்சு கிளம்பிய நிலையில் விஜய் செய்துள்ள காரியம், தான் அரசியலுக்கு வரத் தயார் என்று கூறுவதை போன்று உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் கையசைத்தாலே பயப்படுகிறார்கள், இது தானா சேர்ந்த கூட்டம், அவ்வளவு சீக்கிரம் போகாதே, தற்போது என்ன செய்வார்கள் என்கிறார்கள் ரசிகர்கள். இத்தனை ஆண்டுகளாக விஜய்யின் பிறந்தநாளின் போது வருங்கால முதல்வர் விஜய் என்று போஸ்டர் அடித்து ஒட்டியது வீண் போகவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments