Saturday, March 25, 2023
Home வர்த்தகம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் சரிவு

மும்பை

இந்திய பங்குச்சந்தைகள் 2வது நாளாக மீண்டும் சரிவைச் சந்தித்தன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 202 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. நிப்டி 61புள்ளிகள் சரிந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் நடப்பாண்டில் 2020 ஜனவரி மாதத்தில் 3.1 சதவீதமாக அதிகரிப்பு. தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது போன்ற காரணங்களால் இன்று வர்த்தகம் துவங்கும் பொழுதே சென்செக்ஸ் சரிவுடன் தொடங்கியது. இறுதியில் சென்செக்ஸ் 202.05 புள்ளிகள் சரிந்து 41,275.74 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 61.20 புள்ளிகள் சரிந்து  12,113.45 புள்ளிகளில் நிலைபெற்றது.

இன்டஸ்இன்ட் வங்கி 4.38 சதவீதம் சரிந்தது, பவர் கிரிட், எஸ்பிஐ, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன. பாரதி ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் 4.69 சதவீதம் அதிகரித்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு (14-02-2020) காலை வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 2 காசுகள் சரிந்து ரூ.71.33 காசுகளாக இருந்தது. இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.37 காசுகளாக நிலைபெற்றது. நேற்று வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.31 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments