Friday, September 29, 2023
Home சினிமா முதல் நாளே 10 மில்லியன் ஹிட்ஸை கடந்து 'மாஸ்டர்' சாதனை

முதல் நாளே 10 மில்லியன் ஹிட்ஸை கடந்து ‘மாஸ்டர்’ சாதனை

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் மூன்றாவது லுக் வரை சமூக வலைத்தளத்தையே அதிர வைத்தது. இந்நிலையில் மாஸ்டர் படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம்ம விருந்தாக தான் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வந்த குட்டி ஸ்டோரி பாடல் உதாரணம்.

இந்த பாடல் முதல் நாளே 10 மில்லியன் ஹிட்ஸை கடந்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது, அது மட்டுமின்றி 1 மில்லியன் லைக்ஸை கடந்து பிரமாண்ட சாதனை செய்தது. மேலும், ரசிகர்கள் இந்த வீடியோவை டிக்டாக் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர், இதனால், குட்டி ஸ்டோரி பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

அதோடு இப்பாடல் கடந்த 4 நாட்களாகவே இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது, இது பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இதை தொடர்ந்து வந்த பல படங்களின் டீசர், பாடல்களே இரண்டாம் இடத்தில் இருக்க, மாஸ்டர் சிங்கிள் ட்ராக் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்து வருகின்றது. இந்நிலையில் விரைவில் மாஸ்டர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிய, டீசரை வெகுசில நாட்களிலேயே எதிர்ப்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments