Wednesday, April 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி - அமெரிக்க உளவுத்துறை

டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி – அமெரிக்க உளவுத்துறை

வாஷிங்டன்

2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலிலும் ரஷ்யாவின் தலையீடு உள்ளது என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழுவிடம் அமெரிக்க புலனாய்வுப் பிரிவு தலைவர் ஜோசப் மாகுயிர்  தகவல் தந்தார் எனக் கூறப்படுகிறது. அவர் 20 ஆம் தேதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜெர்மன் நாட்டு அமெரிக்க தூதராக உள்ள கிரேனெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது போல 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலிலும் ரஷ்யா விரிவான பிரச்சாரத்தில் தலையிட்டு நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறது என நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் செய்தி வெளியிட்டன. இச்செய்திகளை அமெரிக்க அதிபரிடம் கடுமையாக மறுத்தார். வரவிருக்கும் அதிபர் தேர்தலில் தனக்கு எதிரான தகவல்களை வேண்டுமென்றே இந்த 2 பத்திரிகைகளும் வெளியிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். டிரம்ப்பின் புகார் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில் மக்கள் பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு கமிட்டி அமெரிக்க புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரியை அழைத்து நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்திகள் குறித்து விளக்கம் தரும்படி கேட்டது அதைத்தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரி ஜோசப் மாகுயிர் பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுக் கமிட்டியில் கடந்த 13 ஆம் தேதி சாட்சியமளித்தார்.

 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குறுக்கிட்டது போல இப்பொழுதும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ரஷ்யா  குறுக்கிட்டு வருகிறது என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கடும் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், புலனாய்வுக் குழுவின் தலைமை அதிகாரியாக உள்ள ஜோசப் மாகுயிரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டார். அவருக்குப் பதிலாக ஜெர்மன் நாட்டில் அமெரிக்க தூதராக உள்ள கிரெனெல் என்பவரை அமெரிக்க புலனாய்வு பிரிவு தலைமை அதிகாரியாக நியமித்து 20 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments