அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவருடன் அவருடைய மனைவி மெலனியா மகள் இவாங்கா உள்ளிட்டோரும் வந்திருந்தனர். பயணம் முடித்து நாடு திரும்பிய அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி மிகச் சிறந்த மனிதர் மிகச் சிறந்த தலைவர். இந்தியா மிகவும் சிறந்த நாடு. இந்தியர்கள் மிகச் சிறந்த வரவேற்பை அளித்தனர். அதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் பல விஷயங்கள் இந்தப் பயணத்தில் நடந்தன.
இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்ய உள்ளோம். அவர்கள் கோடிக் கணக்கில் செலவிட உள்ளனர். ராணுவ ஒப்பந்தம் உட்பட பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு இந்தப் பயணம் உதவியுள்ளது. அமெரிக்கா சர்வதேச வளர்ச்சி நிதி வாரியம் அமைப்பின் கிளை இந்தியாவில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.