உலகம் முழுவதும் இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரபலமடைந்துள்ள டிக்டாக், கடந்த ஆண்டு அதிக அளவில் டவுன்லோடு செய்யப்பட்ட செயலியாக உள்ளது. பள்ளி முதல் அரசு அலுவலகங்கள் வரை டிக்டாக் மோகம் உள்ளதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் இந்த செயலியால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சீன நிறுவனமான டிக்டாக்கில் திரட்டப்படும் தகவல்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், எனவே இந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டுமென்றும் அமெரிக்காவின் குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஸ் கௌலி மசோதா தாக்கல் செய்துள்ளார்.