Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்த Yes Bank - ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க அனுமதி

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்த Yes Bank – ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க அனுமதி

வாராக்கடன் அதிகரித்தால் தனியார் வங்கியான ‘Yes Bank’ கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்த நிலையில் அதன் நிர்வாகம் முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ் பேங்க்கினை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியது:

தனியார் வங்கியான ‘எஸ் பேங்க்’ ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கடன்சுமையில் இருந்து மீட்டெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ரூ. 50,000 வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மருத்துவம் மற்றும் திருமணம் உள்ளிட்ட அவசர தேவைக்களுக்கு 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க வேண்டுமென்றால் வங்கி மேலாளரிடம் தெரிவித்து அவரது அனுமதியுடன் பணத்தை பெற்றுக்கொள்ளாம். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த அறிவிப்பானது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments