Wednesday, May 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியல் - மாருதி சுசுகியின் 7 மாடல்கள்டிசையர்...

விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியல் – மாருதி சுசுகியின் 7 மாடல்கள்டிசையர் முதலிடம்

புதுடெல்லி

ஜனவரி மாத விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மாருதி டிசையர் முதலிடத்தில் இருக்கிறது.

இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:

மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 22,406 டிசையர் கார்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 19,073-ஆக இருந்தது. டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்தில் உள்ளது.

மாருதி பேலினோ விற்பனை 23 சதவீதம் அதிகரித்து (16,717-ல் இருந்து) 20,485 கார்களாக உயர்ந்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மாருதி சுவிப்ட் 3-வது இடத்தில் நீடிக்கிறது. இந்தக் கார் விற்பனை 19,981-ஆக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 19,795 கார்களாக இருந்தது.

மாருதி ஆல்டோ விற்பனை 18,914-ஆக குறைந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 23,360-ஆக இருந்தது. இது நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. மாருதி வேகன் ஆர் 9-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தக் கார் விற்பனை (10,048-ல் இருந்து) 15,232-ஆக உயர்ந்துள்ளது.

கியா செல்டாஸ் கார் விற்பனை 15,000-ஆக இருக் கிறது. இந்த கார் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மாருதியின் ஈக்கோ விற்பனை 12,324-ஆக இருக்கிறது. இந்த கார் ஏழாவது இடத்திற்கு வந்து இருக்கிறது. மாருதியின் விதாரா பிரெஸ்ஸா விற்பனை 10,134-ஆக உள்ளது. இந்த கார் 8-வது இடத்திற்கு சென்றுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கிராண்டு ஐ10 கார் விற்பனை 8,774-ஆக உள்ளது. இது டாப் 10 பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 8-வது இடத்தில் இருந்தது. இந்நிறுவனத்தின் எலைட் ஐ20 கார்கள் விற்பனை (11,749-ல் இருந்து) 8,137-ஆக குறைந்து இருக்கிறது. இந்தக் கார் 10 இடத்தில் இருக்கிறது. இவ்வாறு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

2019 ஆம் ஆண்டு விற்பனை அடிப்படையில் டாப் 10 கார்கள் பட்டிய லில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள் உள்ளன. அதில் மாருதி ஆல்டோ முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 2.08 லட்சம் ஆல்டோ கார்கள் விற்பனை ஆகி இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 2.56 லட்சமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments