Thursday, July 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சமடைந்தது. அப்போது ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 104க்கு விற்பனை ஆனது.  அதன் பிறகு, சற்று விலை குறைய தொடங்கி, ஒரு பவுன் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரத்துக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால், புது வருடம் பிறந்த பின் தங்கம் விலை தொடர்ந்து உயர தொடங்கியது. கடந்த ஜனவரி 1ந்தேதி ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 735க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 880க்கும் விற்பனை ஆனது.  கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80ம், பவுனுக்கு ரூ.640ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 815க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனால் தங்கம் விலை கடந்த செப்டம்பருக்கு பின் பவுன் ஒன்றுக்கு மீண்டும் ரூ.30 ஆயிரத்தை கடந்து, புதிய வரலாறு படைத்தது.  கடந்த ஜனவரி 8ந்தேதி விலை உயர்ந்து ரூ.31 ஆயிரத்து 432க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்பின் ஜனவரி 14 ஆம் தேதி இதன் விலை சற்றே குறைந்து ரூ.30 ஆயிரத்து 112க்கு விற்பனையானது.  பின்பு தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதன்படி, கடந்த பிப்ரவரி 8ந்தேதி ரூ.31 ஆயிரத்து 184க்கும், பிப்ரவரி 15 ஆம் தேதி ரூ.31 ஆயிரத்து 392க்கும், பிப்ரவரி 20ந்தேதி ரூ.31 ஆயிரத்து 840க்கும், பிப்ரவரி 21ந்தேதி ரூ.32 ஆயிரத்து 96க்கும் பிப்ரவரி 22 ஆம் தேதி ரூ.32 ஆயிரத்து 576க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

இதன்பின்னர் பிப்ரவரி 24 ஆம் தேதி ரூ.33 ஆயிரத்து 328 ஆக விற்பனையானது. இதனால் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டது. சென்னையில் தங்கத்தின் விலை கடந்த பிப்ரவரி 29ந்தேதி பவுன் ஒன்றுக்கு ரூ.624 குறைந்து ரூ.31 ஆயிரத்து 888க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்பின்னர் தங்கம் விலை கடந்த 2ந்தேதி ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 40 ஆக இருந்தது.  பின் கடந்த 3ந்தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 112 ஆக விற்பனை செய்யப்பட்டது.  இதேபோன்று கிராம் ஒன்று ரூ.4 ஆயிரத்து 14 ஆகவும் விற்பனையானது.  பின்னர் இந்த விலை மீண்டும் உயர்ந்து பவுன் ஒன்றுக்கு ரூ.32 ஆயிரத்து 200 ஆக இருந்தது.

இந்நிலையில், தங்கம் விலை கடந்த 4ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு 1,024 ரூபாய் அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 224 ஆக விற்பனையானது.  இதேபோன்று ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 153 ஆக இருந்தது.  இதனால் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னையில் ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையை விட ரூ.50 குறைந்து ரூ.4,164க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.33,312க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.49.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments