Tuesday, March 21, 2023
Home உலகம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் அமெரிக்கா

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் அமெரிக்கா

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைஸுக்கு,  இதுவரை ஒரு லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 ஆயிரத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சீனாவில் 3 ஆயிரத்து 213 பேர் பலியாகி உள்ளனர். அடுத்ததாக இத்தாலி நாட்டில் 2 ஆயிரத்து 158 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது பரிசோதனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. mRNA -1273 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்தை அமெரிக்காவின் தேசிய சுகாதார மையத்துடன் இணைந்து மொடெர்னா என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தினை முதற்கட்ட பரிசோதனையாக, முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 18 வயது முதல் 55 வயது வரை உள்ள 45 நபர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 வாரங்களுக்கு நடைபெறும் இந்த சோதனையின் முதல் நபாராக ஒருவருக்கு இம்மருந்தானது இன்று செலுத்தப்பட இருக்கிறது.

இது குறித்து பேசியுள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், mRNA-1273 என்றழைக்கப்படும் மருந்து, சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் கையில்தான் செலுத்தப்படும் என்றும், அவர்களுக்கு காய்ச்சல், உடல்நலக்குறைவு ஏதேனும் ஏற்படுகிறதா என கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை வெற்றி பெற்றாலும் மருந்தானது வெளிவர ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments