Thursday, December 7, 2023
Home இந்தியா கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் மது விற்பனைக்கு அனுமதி - பினராயி விஜயன்

கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் மது விற்பனைக்கு அனுமதி – பினராயி விஜயன்

திருவனந்தபுரம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மத்திய அரசு கடந்த 24ந்தேதி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவானது ஏப்ரல் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,100ஐ கடந்து உள்ளது.  பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.  மராட்டியம், கேரளா மற்றும் டெல்லியில் அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கை உள்ளதுடன் தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி பினராயி விஜயன், கடந்த 24ந் தேதி ஊரடங்கு உத்தரவு அமலான பின்னர், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.  இதனால் பல்வேறு பகுதிகளில் தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

எனவே, கேரளாவில் மதுவிற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி மதுபானம் வழங்க, கலால் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.  மதுபானம் கிடைக்காதது சமூக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

இதேபோன்று மதுவிற்கு அடிமையான நபர்களை, சிறப்பு மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments