Tuesday, October 3, 2023
Home பொது மருத்துவ பணியாளர்கள் குறித்த சைக்கோக்கள் இணையத்தில் பதிவிடும் தவறான செய்தி

மருத்துவ பணியாளர்கள் குறித்த சைக்கோக்கள் இணையத்தில் பதிவிடும் தவறான செய்தி

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் கொட்டுப்போன ரத்தத்தை செலுத்தி 15 கர்ப்பிணி பெண்கள் இறந்துவிட்டதாக  செய்தி வெளியாகி உள்ளது. இதில் தேதி மார்ச் 27ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டு அதாவது கடந்த வெள்ளியன்று இந்த சம்பவம் நடந்தது போல காட்டப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பணியாளர்களின் பணிகளை குறை கூறியும் இந்த மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையில் இவர்களின் சேவைகளை பார்த்தீர்களா என்றும் கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது? 
 
ஆனால், உண்மையைப் பார்த்தால், இந்த செய்தி வெளியிடப்பட்டது கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி. அதாவது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தை, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது போல் மக்களை குழப்பும் விதத்தில்  இணையத்தில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.   
 
தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவ பணியாளர்கள் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் சில பொறுப்பற்ற சைக்கோக்கள், மக்களிடம் இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்பி தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments