Monday, December 4, 2023
Home இந்தியா சொந்த ஊருக்கு திரும்ப 500 கி.மீ., நடந்து வந்த தமிழக மாணவர் பலி

சொந்த ஊருக்கு திரும்ப 500 கி.மீ., நடந்து வந்த தமிழக மாணவர் பலி

ஐதராபாத்

ஊரடங்கால் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த தமிழக மாணவர், 500 கி.மீ., நடைப்பயணமாக கிளம்பினார். இந்நிலையில், தெலுங்கானாவின் செகந்திராபாத் வரும்போது பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து அத்யாவசிய சேவைகள் தவிர அனைத்து போக்குவரத்தும் தடைப்பட்டது. இதனால், வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். பலர், நடைபயணமாக சொந்த ஊர் திரும்பினர். ஆனால், இருக்கும் இடத்திலேயே அனைவரும் தனித்து இருக்குமாறும், சொந்த ஊருக்கு நடந்து செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் பாலசுப்ரமணி (வயது 23) என்பவர், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் படித்து வருகிறார். ஊரடங்கு அமலானதால், உணவின்றி தவித்த அவர் சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்து, 26 பேர் கொண்ட மாணவர்கள் குழுவுடன் நடைபயணம் மேற்கொண்டனர். சுமார் 500 கி.மீ., தூரம் நடந்து சென்று தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை அடைந்துள்ளனர். அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கியிருந்த போது, லோகேஷ்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவர்களை குழுவினர் அழைத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் லோகேஷ் உயிரிழந்தார்.

இது குறித்து அவருடன் வந்த குழுவினர் கூறியதாவது:

நாங்கள் கடந்த 3 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறோம். போக்குவரத்து வசதி ஏதும் கிடையாது. செல்லும் வழியில் சிலர் எங்களுக்கு உணவு அளிப்பார்கள். சிலர் எங்களை கொஞ்ச தூரம் அவர்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். எங்களுக்கு உதவி செய்த வாகன ஓட்டுனர்களை போலீசார் அடித்துள்ளனர். சமூக விலகல் அவசியம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லாமல் இப்படி கிளம்பி வந்து விட்டோம். எங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லாவிட்டால், குழுவாக இருக்கும் எங்களுக்கு வராத கொரோனாவும் வந்து விடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

லோகேஷை ஐதராபாத்திலேயே அடக்கம் செய்ய இருந்த நிலையில், உள்துறை அமைச்சகத்தின் உதவியால் லோகேஷின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments