கொரோனா குறித்து கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மனிதனிடம் இருந்து மனிதனுக்கு அது பரவாது என தெரிவிக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் அந்த கருத்துக்கு பிறகு சீனாவிலிருந்து வரும் விமானங்களை நிறுத்தப் போகிறோம் என அமெரிக்கா கூறியபோது என்னை அவர்கள் மிகவும் கடுமையாக விமர்சித்தனர், அவ்வாறு அவர்கள் விமர்சனம் செய்தது மிகவும் தவறானவை என்று டிரம்ப் கூறியுள்ளார்.