கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் வெளிநாடுகளில் இருந்து படகுகள் மூலம் இரகசியமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வுப் பிரிவினர் இதை அறிவித்துள்ளதாக சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக சந்தேகத்திற்குரிய படகுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கும் நோக்கில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையான கடற் பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டு விமானப்படையினர் வான் வழி கண்காணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இவ்விதமாக இந்தியாவில் இருந்து கொரோனா நோயாளிகள் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர். அதேவேளை கடற்படையினர் நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் கண்காணிப்புகளையும் அதிகரித்துள்ளனர்.