டெல்லி
இந்தியாவில் 718 மாவட்டங்களில் 364 மாவட்டங்கள் நாடு முழுக்க கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50% மாவட்டங்கள் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தீவிரமாக பரவி உள்ளது. கடந்த ஒரே நாளில் மட்டும் 909 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க மொத்தம் 8356 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 3500 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் தற்போது நாடு முழுக்க ஒரே வாரத்தில் 8356 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுக்க 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை நாடு முழுக்க 716 பேர் குணமாகி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 74 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா முழுக்க 1,86,906 பேருக்கு இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. சராசரியாக தினமும் நாடு முழுக்க 15,747 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 584 பேருக்கு சராசரியாக தினமும் கொரோனா தொற்று ஏற்படுகிறது.
இந்தியா முழுக்க 40 கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையாக இந்த மருந்துகள் உருவாக்கப்படவில்லை. இந்த மருந்துகள் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. இந்தியாவில் 718 மாவட்டங்களில் 364 மாவட்டங்கள் நாடு முழுக்க கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 50% மாவட்டங்கள் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 29 கணக்குப்படி வெறும் 160 மாவட்டங்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டது. ஏப்ரல் 6 கணக்குப்படி 284 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. தற்போது இதன் எண்ணிக்கை 364ஐ தொட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 50% மாவட்டங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
அதிகமாக உத்தர பிரதேசத்தில் நிறைய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 40 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 33 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 27 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது வரை 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.