Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகொரோனா செய்திகள் 13-04-2020

கொரோனா செய்திகள் 13-04-2020

தமிழ்நாட்டில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு – முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு

சென்னையில் வெளியில் வரும்போது முகக்கவசம் அணிவது நாளை முதல் கட்டாயம் – சென்னை மாநகராட்சி.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து கிளை, கீழ் நீதிமன்றகளும் வரும் 30-ம் தேதி வரை இயங்காது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்வு. இந்தியாவில் கொரோனா  உயிரிழப்பு 273 லிருந்து 308 ஆக அதிகரிப்பு. குணமடைந்தோரின் எண்ணிக்கை 857 ஆக உயர்வு – மத்திய சுகாதார அமைச்சகம்.

இந்தியாவில் 718 மாவட்டங்களில் 364 மாவட்டங்கள்  கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50% மாவட்டங்கள் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் மற்ற அரசு ஊழியர்களோடு சிபிஐ அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று சிபிஐ இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

திருச்சியில் இன்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நான்கு பேரில் 1 வயது குழந்தையும் அடங்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தந்தையின் மூலம் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கைக்குழந்தை என்பதால், குழந்தையின் தாயாரும்  உடனிருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 மருத்துவர்களும் 5 செவிலியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 8 பேரில், 2 பேர்  அரசு மருத்துவர்கள், 2 பேர் ரயில்வே மருத்துவர்கள் மீதமுள்ள நால்வர் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,60,425 ஆக அதிகரிப்பு. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,514 பேர் உயிரிழப்பு. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,105 ஆக அதிகரிப்பு.

ஸ்பெயின் – 1,66,831, இத்தாலி – 1,56,363;பிரான்ஸ் – 1,32,591; ஜெர்மனி – 1,27,854; இங்கிலாந்து – 84,279; ஈரான் – 71,686 பேர் கொரோனாவால் பாதிப்பு.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,14,208 ஆக அதிகரிப்பு. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,52,652 ஆக அதிகரிப்பு. கொரோனா பாதிப்பில் இருந்து 4,23,400 பேர் குணமடைந்துள்ளனர்.

கொல்கத்தாவுக்கு சென்று திரும்பிய திமாபூரை சேர்ந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாகலாந்து மாநிலத்திற்கும் கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து வங்கிகளும் மூடல். ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி நடவடிக்கை.

ஏழைக்கு உதவுபவன் கையை அரசு தட்டி விடுகிறது – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும். பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் – முதலமைச்சர் பழனிச்சாமி

திருவாரூர்  அரசு மருத்துவமனையில் கொரானாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4பேர் குணமடைந்தனர். ஏற்கனவே 3பேர் குணமடைந்த நிலையில் மேலும் 4பேர் கொரானாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

உத்தரகாண்டில் கடந்த 100 மணி நேரத்தில் புதிதாக  யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்துள்ளனர் – உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்.

அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன. போலீசாருக்கு உதவ NSS, NCC மாணவர்கள் களமிறங்க உள்ளனர் – மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புன்யா ஸ்ரீவஸ்தா தகவல்.

தமிழகத்தில் 97.54% மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு. அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு. விடுபட்டவர்கள் வரும் 30ம் தேதி வரை நிவாரண உதவித் தொகையை பெற்றுக்கொள்ளலாம் – உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா.

சீனாவில் இருந்து துரித பரிசோதனை கருவிகள் ஏப்ரல் 15-ம் தேதி இந்தியாவுக்கு வரும். நேற்றுவரை 2.06 லட்சம் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த 6 வாரங்களுக்கு பரிசோதனை நடத்த தேவையான கிட்கள் கைவசம் உள்ளன –  ஐ.சி.எம்.ஆர். தகவல்.

சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உயிரிழந்ததால் அவரது உடலை கவச உடையணிந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் அம்பத்தூர் மின்மயானத்தில் வைத்து விட்டு சென்றுவிட்டனர்.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் யாரும் பட்டினியால் வாடக் கூடாது. பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்.

ஊரடங்கு நேரத்தில் அனைவருக்கும் உணவு வழங்க பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.‌

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு. தேர்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதே தவிர, ரத்து செய்யப்படவில்லை. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை செயலாளர்.

ஊரடங்கு நீட்டிப்பால், அனைத்து பொறியியல், தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை விடுமுறை – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

கொரோனா சிகிச்சை அளிக்கும் மையமாக மாறுகிறது நந்தம்பாக்கம் வர்த்தக மையம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளை அமைக்கும் பணி தீவிரம்.

புதுச்சேரியில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு – முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

சென்னையில் வீடுதோறும் சென்று உடல்நல மதிப்பாய்வு செய்யும் பணி இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட இல்லங்களில் கணக்கிடப்பட்டு, 95% முழுமை அடைந்துள்ளது – சென்னை மாநகராட்சி

ஊரடங்கு நீட்டிப்பால், அனைத்து பொறியியல், தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை விடுமுறை – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

உத்தர பிரதேசத்தில் அதிகமாக 40 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் 33 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 27 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது வரை 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பேக்கரி கடைகள் பார்சல் முறையில் செயல்பட, காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை அனுமதி.

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விவசாய விளைபொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல எந்தவித பாஸ் மற்றும் அனுமதியும் தேவையில்லை.

அனைவருக்கும் கொரோனா சோதனையை  இலவசமாக்க உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. தனியார் ஆய்வகங்கள் அனைவருக்கும் இலவசமாக செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவித்ததையடுத்து, ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சேவை அளிக்க  உச்ச நீதிமன்றம் உத்தரவு.

தமிழகம் முழுவதும் வீடுகளுக்கே மருந்து சப்ளை. 18001212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பெறலாம்.

டெஹ்ராடூன் நகரைச் சேர்ந்த வங்காள கிரிக்கெட் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், டெஹ்ராடூன் எல்லையில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ டெஹ்ராடூன் காவல்துறையினரிடம் ₹2.5 லட்சம் கொடுத்துள்ளார். சுமார் 100 குடும்பங்களுக்கு ரேஷன் மற்றும் மருந்துகளையும் வழங்கியுள்ளார்.

இந்த நாடடங்கின் போது அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டத்தில் ஜெகாங்கிராபாத்தில் ஒரு தாயால் தன் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் அவர்களை கங்கை நதியில் எறிந்தாள். அந்தப் பெண் மனநிலை சரியில்லை என்று போலீசார் அறிக்கை அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments