ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பியளிக்க, விமான போக்குவரத்து நிறுவனங்கள் மறுத்துள்ளன.
முன்னதாக ஏப்ரல் 14 வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் 15-ம் தேதிக்குப் பிறகான உள்நாட்டு விமான சேவைக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்ய அனுமதித்தன.
இந்நிலையில், தற்போது மே 3-ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, பலரும் தங்களது முன்பதிவை ரத்து செய்து வருகின்றனர். ஆனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பணத்தை திரும்பி வழங்க முடியாது எனவும், மாறாக பயனாளர்கள் மாற்று தேதியில் அதே டிக்கெட்டில் பயணம் செய்து கொள்ளலாம் எனவும் வலியுறுத்தியுள்ளன.