தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், சேலம், நாகை, விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகம் பாதித்த ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது.
தமிழகத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை இன்று முதல் திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விளையாட்டு உலகமே முடங்கினாலும், ஒலிம்பிக் பதக்கங்களை குறிவைக்கும் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே தங்களை தயார் செய்து வருகின்றனர்
சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டிருப்பதால் வாகன அனுமதி சீட்டு பெறுவதற்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
கடந்த 10 நாட்களில் ஷாங்காய், ஹாங்காங்கிலிருந்து 170 டன் கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரும் வாரங்களில் மேலும் 300 டன் மருந்துகள் வேறு 2 இடங்களில் இருந்து கொண்டு வரப்படவுள்ளன – ஏர் இந்தியா
சிதம்பரம்,விருத்தாசலம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இறைச்சி, மீன் விற்க அனுமதி.
திண்டிவனத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 7நாட்கள் கடையடைப்பு செய்யப்போவதாக வியாபாரிகள் அறிவிப்பு
திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள 9 இடங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்களை விரைவாக கொண்டு செல்ல சரக்கு ரயில்கள் இயக்கம். தற்போது இந்த ரயில்கள் 65 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. ஏப்ரல் 14 வரை 507 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது – ரயில்வே அமைச்சகம்
2020 ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு – பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
மே 31ஆம் தேதி IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் கட்டத்தேர்வு நடைபெறும். மே 3ஆம் தேதிக்கு முன்பாக நடைபெற இருந்த தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும்- யு.பி.எஸ்.சி அறிவிப்பு.
இந்தியாவில் உள்ள மதுக்கடைகளை மூட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு. எந்த மாநிலம் மதுக்கடைகளை திறக்க அனுமதி கொடுத்து இருந்தாலும் உடனடியாக மூட உத்தரவு.
வாணியம்பாடி நகர்ப்பகுதி முழுவதும் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர். மறு உத்தரவு வரும் வரை கடைகளை திறக்கக்கூடாது, அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் – மாவட்ட ஆட்சியர்.