Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகொரோனா செய்திகள் 18-04-2020

கொரோனா செய்திகள் 18-04-2020

கேடிலா, சீரம் உள்பட இந்தியாவைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தீவிரம்.

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வூகானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்கள் பட்டியலை சீனா திருத்தி உள்ளது. வூகானில் இறந்தவர்கள் பட்டியலில் 3,342 பேர் இறந்த நிலையில் கூடுதலாக 1,290 பேர் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய பட்டியலின்படி சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களை எண்ணிக்கை 4,638-ஆக உள்ளது.

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372 ஆக உயர்வு. 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 82 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன – அமைச்சர் விஜயபாஸ்கர்.

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 14,378லிருந்து 14,792ஆக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 480லிருந்து 488ஆக உயர்வு.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்றும், இன்றும் யாரும் புதிதாக உயிரிழக்கவில்லை.

ரேபிட் டெஸ்ட் கருவி மத்திய அரசு நிர்ணயித்த விலையான ரூ 600-க்கே வாங்கப்பட்டது – தமிழக அரசு.

பணியில் இருக்கும் தபால் ஊழியர்களுக்கு கொரோனா ​தொற்றினால் ரூ.10 லட்சம் இழப்பீடு -மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவிப்பு.

கடலூரில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது. மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும். ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும்.

கொரோனா வைரஸ் தாக்கம் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பை அளித்துள்ள நிலையில், சீனா மீது அமெரிக்கா அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிதீவிரமாக பரவிவருவதால் கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு திணறிவருகிறது.

புதுச்சேரியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும். இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் – முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை.

கேரளாவில்  பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. நான்கு சிவப்பு மண்டல மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் பெரும்பாலான சேவைகள் திரும்புகிறது. இரவு 7 மணிவரை ரெஸ்டாரண்ட்களில் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி. முடிதிருத்தும் கடைகள் உள்ளிட்ட பிற சேவைகளும் ஆரம்பம். பொது போக்குவரத்து மற்றும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை தொடரும்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆணையர் அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைவாழ் மக்கள் பகுதியான மும்பையின் தாராவியில் கொரோனா தொற்று எண்ணிக்கை 100-ஐக் கடந்தது. 15 புதிய தொற்றுக்களுடன் மொத்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இந்தப் பகுதியில் மட்டும் 101 ஆக அதிகரித்துள்ளது. இதில் 10 பேர் இதுவரை இப்பகுதியில் மரணமடைந்துள்ளனர். 62 வயது நோயாளி ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்தார். மட்டுங்கா தொழிலாளர் முகாமில் 3 பேருக்கு புதிதாகக் கொரோனா பரவியுள்ளது.

தாராவியில் சுமார் 8 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பகுதி “வைரஸ் ஹாட்ஸ்பாட்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் 9 கட்டுப்பாட்டுப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் போலீசார் தடுப்பு இட்டு காவல் பணி புரிந்து வருகின்றனர். இந்த ஹாட்ஸ்பாட் பகுதியில் குடியிருப்பு வாசிகள் வீட்டிலிருந்து வெளியே வர அனுமதியில்லை, அத்தியாவசியப் பொருட்கள் வீட்டு வாசலுக்கு வரும்.

2073 கொரோனா வைரஸ் கேஸ்களுடன் நாட்டில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக விளங்குகிறது மும்பை. மும்பையின் 1.2 கோடி மக்களும் முழு லாக் – டவுனில் இருந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக புனேவில் 180 பேர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அமர வைக்கப்பட்டனர்.

தமிழகத்திற்கு சுமார் 36,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் இதுவரை வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த 600 ரூபாய்க்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments