Sunday, May 22, 2022
Home பொது கொரோனா செய்திகள் 24-04-2020

கொரோனா செய்திகள் 24-04-2020

26 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை சென்னையில் மளிகை &  இறைச்சி கடைகள்  &  பேக்கரிகள் இயங்காது. தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கும் , பறக்கும் படைகளுக்கும் அரசு உத்தரவு.

முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி – முதலமைச்சர் பழனிசாமி

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

புதுச்சேரி : கடந்த 9ம் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை இயக்குநர்

முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என 56 பேருக்கு புதுச்சேரியில் நேற்று கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்று தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 474-ஆக அதிகரிப்பு – சுகாதாரத்துறை

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,427 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா தொற்று.

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 718லிருந்து 723 ஆக அதிகரிப்பு.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,91,074 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 7,49,662 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக மத்தியபிரதேசத்தில் இருந்து ரத்தமாதிரிகள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகிறது. 1,500 பேரின் ரத்தமாதிரிகள் தனிவிமானம் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு வரவுள்ளது – புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர்

இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதார துறை அறிவிப்பு.

மும்பையில் கொரோனாவை கண்டறிய மொபைல் சோதனை வேன்களை மும்பை மாநகராட்சி அறிமுகப்படுத்துகிறது. சந்தேகத்திற்குரிய கொரோனா நபர்களின் மாதிரிகளை இந்த வாகனம் சோதிக்கும் என்றும் இந்த வசதியை 2 தனியார் ஆய்வகங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் தேதி மாற்றம். ஏப்ரல் 24, 25 க்கு பதிலாக மே 2, 3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். மே 4 முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் – தமிழக அரசு

ஊரடங்கின்போது டெல்லியில் சிக்கிய ஆர்பிஎஃப் படையினர் 9 பேருக்கு கரோனா வைரஸ்: தென்கிழக்கு ரயில்வே தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு நிபந்தனைகளுடன் தீப்பெட்டி ஆலைகள் செயல்படத் தொடங்கின. சமூக விலகலுடன் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது.

நாளை முதல் மதுரையில் முக்கிய பணிகளுக்கு வாகனங்களில் செல்லும் அரசு மற்றும் தனி நபர்களுக்கு கலெக்டரேட்டில் பதிவு செய்து QR கோடு டோக்கன் வாங்கியவர்கள் மட்டுமே சாலையில் செல்ல முடியும். மற்றவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை அறிவித்ததால், அனுமதி பெற சமூக இடைவெளியை பற்றி கவலைப்படாமல் கலெக்டர் அலுவலகத்தில் வாகன ஓட்டிகள் குவிந்தனர்.

கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 40 நாள்களாக அமலில் இருந்து வருகிறது. வாகனங்கள் இயக்கப்படவில்லை. இந்தநிலையில் வடமாநிலங்களில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாசு குறைந்துள்ளதாக அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல். ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு – மாவட்ட ஆட்சியர்

ஆபத்தான கட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளின் சிசிச்சைக்காக பிளாஸ்மாவை தானமாக வழங்க வேண்டும். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்.

புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு எளிதில் கொரோனா வைரஸ் நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.

கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதை எதிர்த்து போராட்டம் நடத்திய வழக்கில் கைதான 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 6 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி – மாநகர காவல் ஆணையர் சுமித் சரண்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக கோவை ESI மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரில்  இதுவரை 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1604-ஆக அதிகரிப்பு.

பழுதான ரேபிட் டெஸ்ட் கிட்கள் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

- Advertisment -

Most Popular

ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் – பிரதமர் மோடி

ராஜஸ்தான் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று ராஜஸ்தானில் நடைபெற்று வரும் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஹிந்தி திணிப்பு பற்றி சர்ச்சை நிலவி வரும் நிலையில் மாநில...

பெகாசஸ் விசாரணை குழுவுக்கு அவகாசம் நீட்டிப்பு

டெல்லி பெகாசஸ் விசாரணை குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதம் 20-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி மாநகராட்சி பணிக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கியத்தில்...

ஷவர்மா ஆபத்தான உணவா?

ஷவர்மாவை சூடாக்கும்போது வெளியில் உள்ள பகுதி மட்டுமே வேகிறது. இறைச்சி போதிய அளவில் வேகாமல் உள்ளதுதான் பிரச்சனை. கோழிக் கறியைக் குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் வெளியிலேயே வைத்திருப்பதால் அவை கெட்டுப் போகின்றன. வெளிநாட்டு...

Recent Comments