Wednesday, March 29, 2023
Home தமிழகம் தமிழகத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 2,058 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 2,058 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்.27) தமிழகத்தில் 1,937 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இன்று (ஏப்.28) தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மொத்தமாக 5 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் 103 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேருக்கும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே தொற்று எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும் சென்னையில் மொத்தமாக 673 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, இன்று மட்டும் 27 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 1,128 பேர் வீடு திரும்பியுள்ளனர். 902 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 1,874 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 93 ஆயிரத்து 189 தனிப்பட்ட நபர்கள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

30 ஆயிரத்து 692 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 47 பேர் அரசு தனிமை முகாம்களில் கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில், 1,856 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments