Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாவங்கி கடனை திருப்பி செலுத்தாத 50 தொழில் அதிபர்களுக்கு ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி....

வங்கி கடனை திருப்பி செலுத்தாத 50 தொழில் அதிபர்களுக்கு ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி. – ரிசர்வ் வங்கி

டெல்லி

வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் 90000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். இதேபோல் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இதே போல் பல தொழில் அதிபர்களும் பல கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளார்கள்.

இப்படி கடன் வாங்கிவிட்டு மோசடியில் ஈடுபட்டு தப்பி ஓடிய பல தொழில் அதிபர்களை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. விஜய் மல்லையா , நீரவ் மோடி, உள்பட பல தொழில் அதிபர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். கடந்த 24-ந்தேதி ரிசர்வ் வங்கி அவருக்கு பதில் அளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரத்தையும் கூறியுள்ளது . மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தனது பதிலில் தெரிவித்துள்ளது.

தள்ளுபடி செய்யப்பட்ட நபர் மற்றும் கடன் விவரம் வருமாறு:

மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் -ரூ.5,492 கோடி.
ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனம் -ரூ.4,314 கோடி.
வின்சம் டயமண்ட்ஸ் -ரூ.4,076 கோடி
ரோட்டேமேக் குளோபல் நிறுவனம் -ரூ.2,850 கோடி.
குடோஸ் கெமி -ரூ.2,326 கோடி.
ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா -ரூ.2,212 கோடி.
சூம் டெவலப்பர்ஸ் -ரூ.2,012 கோடி.
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் -ரூ.1,943 கோடி.
பிரீசியஸ் ஜூவெல்லரி அண்டு டயமண்ட்ஸ் -ரூ.1,962 கோடி.
மெகுல் சோக்சியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திரா நிறுவனங்கள் -ரூ.1,447 கோடி, மற்றும் ரூ.1,109 கோடி என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments