சென்னை
இதுவரை இல்லாத அளவாக, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1458 ஆக உயர்ந்துள்ளது. இன்று கடலூரில் 9 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 4 பேர், மதுரை, தென்காசி, அரியலூர், திருவள்ளூரில் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருவண்ணாமலை, கன்னியாகுமரி, செங்கல்பட்டில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று 10584 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 266 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 187, பெண்கள் 79 பேர் ஆவர். இதுவரை தமிழகத்தில் 2015 ஆண்களும். 1007 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை 1,40,716 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1,50,107 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 38 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1379 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 1611 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிகம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் இன்றைய நிலையில் வீட்டுக்கண்காணிப்பில் 37 ஆயிரத்து 206 பேர் உள்ளார்கள். அரசின் தனிமைப்படுத்தும் முகாம்களில் 40 பேர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளார்கள். கோவையில் இன்று 44 வயது ஆண் ஒருவர் கொரானாவால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.