Monday, July 4, 2022
Home பொது கொரோனா செய்திகள் 07-05-2020

கொரோனா செய்திகள் 07-05-2020

தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5409 ஆக அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி; மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை 8ஆக உயர்வு. சூளகிரியில் 2 மூதாட்டிகளுக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் அவர்கள் மூலம் மேலும் 4 பேருக்கு தொற்று.

நெல்லையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 82 வயது முதியவர் உயிரிழந்தார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலியானார். நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 67 பேரில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 சென்னையில் 7 மண்டலங்களில் மட்டும் தான் பாதிப்பு அதிகம் உள்ளது – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.

துபாயில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கொச்சியில் இருந்து அனுப்பப்பட்ட ஏர் இந்தியா விமானம் துபாய் சென்று அடைந்தது. முதல் கட்டமாக அனுப்பப்படும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் விமானம் அங்கிருந்து கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்தை முதற்கட்டமாக 25% மட்டும் இயக்க விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல். விமானம் மற்றும் விமான நிலையங்களில் அதிகம் பேர் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கேன்சர் நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தகவல்.

கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக 5,231 ரயில் பெட்டிகள் தயாராக உள்ளன -இந்திய ரயில்வே துறை

ஊரடங்கை உலக நாடுகள் அவசர கதியில் விலக்கிக் கொள்ள கூடாதென்றும், அப்படி விலக்கினால் கொரோனா பாதிப்பு உடனடியாக அதிகரித்து விடும் என்றும்  உலக சுகாதார அமைப்பு (W.H.O)எச்சரித்துள்ளது.

கொரோனா பரவலைத் கட்டுக்குள் வைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது – சீன அதிபர் ஜி ஜின்பிங்

ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயங்கும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 16,758 பேர் பாதிப்படைந்துள்ளனர். . இதையடுத்து குஜராத்தில் 6,629 பேரும் டெல்லியில் 5,532 பேரும் தமிழகத்தில் 4,829 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

ஈரானில் பயங்கர நிலநடுக்கம் – 3 பேர் பலி பலர் படுகாயம்

ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள ஹர்மொஸ்கன் மகாணத்தில் இன்று (ஜூலை 2) அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்...

7 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை 12.28 கோடி

7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை - சென்ட்ரல் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. தொடங்கியது முதல்...

மணிப்பூர் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். துபுல் ரயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. இதுவரை 13 பேர் உயிருடன்...

சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அரசை கவிழ்த்தார். பின்பு பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்த...

Recent Comments