Friday, September 29, 2023
Home இந்தியா விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு - 3 கி.மீக்கு பரவிய வாயு.

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு – 3 கி.மீக்கு பரவிய வாயு.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர் வெங்கடபுரம் பகுதியில் அமைந்து இருக்கும் எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையானது  ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இயங்கி உள்ளது. இந்நிலையில், அந்த ஆலையில் இருந்து அதிகாலையில் ரசாயன வாயுக் கசிவு நிகழ்ந்துள்ளது.

ஆலையில் இருந்து வெளியேறிய ரசாயன வாயு சம்பவத்தில் 6 வயது சிறுமி உள்பட 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகாலை 2.30 முதல் 3 மணி அளவில் ரசாயன வாயு கசிவு சம்பவம் நிகழ்ந்ததால் வாயுவை சுவாசித்த மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகாலையில் வாயுக் கசிவு நிகழ்ந்ததால் மக்கள் அதை அறியாமலேயே இருந்துள்ளனர்.

மீட்புக் குழுவினர், போலீஸ் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியால் நூற்றுக்கணக்கான மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் கோபாலப்பட்டினம் மற்றும் கிங் ஜார்ஜ் (KGH) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெங்கடபுரம் பகுதியைச் சுற்றியுள்ள 128-க்கும் மேற்பட்டோர் கே.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 98 பேர் மீண்டுள்ளதாகவும், 10 பேரு மூச்சுத்திணறல் பிரச்சனையை சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

ஒன்று முதல் ஒன்றரை கி.மீ சுற்றளவிற்கு அதிக பாதிப்பு நிகழ்ந்து உள்ளதாகவும், சுமார் 3 கி.மீ தூரம் வரை வாயுவின் துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது. கால்நடை விலங்குகள் கூட இருந்துள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments