Tuesday, May 17, 2022
Home உலகம் இந்தியாவில் 5 கோடி பேருக்கு கை கழுவும் வசதி இல்லை - வாஷிங்டன் பல்கலைக்கழகம்

இந்தியாவில் 5 கோடி பேருக்கு கை கழுவும் வசதி இல்லை – வாஷிங்டன் பல்கலைக்கழகம்

புதுடில்லி

இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் முறையாக கை கழுவும் வசதி இல்லாததால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கும், பரப்புவதற்குமான அபாயம் அதிகமிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், சோப் மற்றும் சுத்தமான தண்ணீர் வசதி கிடைக்காததால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், வளர்ந்த நாடுகளை விட கொரோனா தொற்றை பரப்ப அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் சுகாதார பார்வைகள் என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளில், சகாரா ஆப்பிரிக்கா மற்றும் ஓசினியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு, முறையாக கைகழுவும் வசதி கிடைப்பதில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதில் கை கழுவுதல் முக்கிய பங்கு வகிக்கிறது. பல நாடுகளில் குறைந்த சுகாதார திறன் காரணமாக கைகழுவும் வசதி இன்றி இருப்பது கவலையளிக்கிறது.

சுமார் 46 நாடுகளில் சோப் மற்றும் சுத்தமான தண்ணீர் இன்றி 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், நைஜீரியா, எத்தியோப்பியா, காங்கோ, இந்தோனேஷியா நாடுகளில் 5 கோடிக்கும் அதிகமானோருக்கு கைகழுவும் வசதி இல்லாத சூழல் உள்ளது. தற்காலிக தீர்வாக சானிடைசர் அல்லது தண்ணீர் லாரிகளை பயன்படுத்தலாம். ஆனால் மோசமான கை கழுவுதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் உயிரிழப்புகளை தடுக்க நீண்ட கால தீர்வுகளை செயல்படுத்த வேண்டுமென ஆய்வாளரான பிரவுர் கூறியுள்ளார்.

உலக மக்கள்தொகையில் 25 சதவீதத்தினர் பயனுள்ள கை கழுவுதல் வசதிகளை கொண்டிருக்கவில்லை என்றாலும், 1990 மற்றும் 2019க்கு இடையில் பல நாடுகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளில் சவுதி அரேபியா, மொராக்கோ, நேபாளம் மற்றும் தான்சானியா ஆகியவை அடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் பள்ளிகள், பணியிடங்கள், மருத்துவமனை மற்றும் சந்தைகள் போன்ற வீடு அல்லாத பொது இடங்களில் உள்ள கை கழுவுதல் வசதிகளை மதிப்பிடவில்லை. ஆப்பிரிக்காவில் 190,000 பேர் கொரோனா தொற்றால் இறக்கக்கூடும் என்றும், மொத்த மக்கள் தொகையான 1.3 பில்லியன் மக்களில், 44 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஷவர்மா ஆபத்தான உணவா?

ஷவர்மாவை சூடாக்கும்போது வெளியில் உள்ள பகுதி மட்டுமே வேகிறது. இறைச்சி போதிய அளவில் வேகாமல் உள்ளதுதான் பிரச்சனை. கோழிக் கறியைக் குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் வெளியிலேயே வைத்திருப்பதால் அவை கெட்டுப் போகின்றன. வெளிநாட்டு...

ஆந்திராவில் 3 ஐஏஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாதம் சிறை

ஆந்திராவில் 2019ம் ஆண்டு கிராம வேளாண்மை உதவியாளர் பதவிக்கு மனுதாரரின் மனுவை பரிசீலித்து 2 வாரங்களுக்கு உரிய உத்தரவை பிறப்பிகுமாறு வழக்கு ஒன்றில் ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும்...

ஆன்மீகவாதி கருத்து சொல்லக்கூடாதா? – மதுரை ஆதீனம்

குருபூஜையன்று தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் பக்தர்கள் தூக்கிச் செல்வார்கள். ஆதீனங்கள் பல்லக்கில் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். மடத்துப் பிரச்சினையை மத...

முதல் எலெக்ட்ரிக் கார் – முன்பதிவு தொடங்கியது

இந்தியாவில் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கியா நிறுவனம் முதல் EV6 என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார் மிகவும் எளிமையானதாகவும், நவீன...

Recent Comments