Monday, May 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா – மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277.

சென்னை

தமிழகத்தில் இன்று (24-05-2020)  765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சராசரியாக ஒவ்வாரு நாளும் 600 பேருக்கு அதிகமாக புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. சென்னையில் தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16277ஆக உயர்ந்துள்ளது. வெறும் இரண்டு வாரத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையல் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 46 பேருக்கும், கடலூரில் 3 பேருக்கும் அரியலூரில் ஒருவருக்கும் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கும், கன்னியாகுமரியில் 2 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 15 பேருக்கும், மதுரையில் 6 பேருக்கும், புதுக்கோட்டையில் ஒருவருக்கும், ராமநாதபுரத்தில் ஒருவருக்கும், ராணிப்பேடடையில் 2 பேருக்கும், தஞ்சாவூரில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனியில் 4 பேருக்கும், திருவள்ளூரில் 34 பேருக்கும், திருவண்ணாமலையில் 4 பேருக்கும், திருவாரூரில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 13 பேருக்கும், விமான நிலைய கண்காணிப்பில் 2 பேருக்கும, ரயில்வே கண்காணிப்பில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 833 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 8,324 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 7,839 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 5,653 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்று மட்டும் 12,275 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 409615 சாம்பிள்கள் (மே 24 நிலவரப்படி) இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் என்று பார்த்தால் இன்று மட்டும் 11,441பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 24ம் தேதியான இன்றுடன் சேர்த்து இதுவரை 3,91,252 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments