60 நாட்களுக்கு பின்னர் உள்நாட்டு பயணிகள் விமான சேவை இன்று ( மே 25) மீண்டும் துவங்கியது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக பயணியர் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்கட்டமாக உள்நாட்டு விமான போக்குவரத்தை மட்டும் இன்று துவக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, லக்னோ, டில்லி , கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவை துவங்கியது. பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வந்தனர். மாஸ்க் அணிந்திருந்த அவர்கள், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதற்காக பயணிகள், விமான நிலையம் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெரும்பாலான பயணிகள் முகத்தை முழுவதும் மூடும் வகையிலான பிளாஸ்டிக் மாஸ்க்கையும் அணிந்திருந்தனர்.
சென்னையில் இருந்து இன்று காலை 6.35 மணிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் டில்லி கிளம்பி சென்றது. 260 பேர் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் 111 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.