Tuesday, October 3, 2023
Home பொது படுக்கை அறைக்கு விஷ பாம்பை அனுப்பி மனைவியை கொன்ற கணவன்

படுக்கை அறைக்கு விஷ பாம்பை அனுப்பி மனைவியை கொன்ற கணவன்

கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் உத்ரா. இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018 இல் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.

உத்ராவை திருமணம் செய்து வைத்த அவரது பெற்றோர் கார், நகைகள் என போதுமென்ற அளவுக்கு வரதட்சணை கொடுத்துள்ளனர். எனினும் சூரஜ் மேலும் வரதட்சணை வேண்டுமெனக் கூறி உத்ராவை சித்ரவதை செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் உத்தரவை தீர்த்துக்கட்ட நினைத்த அவர், தடையமின்றி எப்படி கொலை செய்யவது எப்படி என்பது குறித்து யூடியூபில் தேடி கற்றறிந்துள்ளார். அதன்பின் சுரேஷ் என்ற பாம்பாட்டியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் சூரஜ்.

பாம்பாட்டி மூலமாக கருமூர்க்கன் என்ற கொடிய விஷமுள்ள பாம்பை ரூ. 10 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கியுள்ளார் சூரஜ். அதனையடுத்து கடந்த மார்ச் 6ம் தேதி தனது அறையில் படுத்திருந்த உத்ராவிடம் பாம்பை அனுப்பி கடிக்க செய்துள்ளனர். இதனால் கதறி துடித்த உத்ராவை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

சிகிச்சை பெற்று வந்த உத்ரா தனது அம்மா வீட்டில் தங்கி வந்துள்ளார். உடல்நலம் தேறாததால் உத்ராவை அவரது பெற்றோர் உடனிருந்து பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் காலையில் படுக்கையில் இருந்த உத்ராவிடம் இருந்து எந்த அசைவும் இல்லாததால் மீண்டும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று உத்ராவின் வீட்டுக்கு சூரஜ் வந்து சென்றதால், இதுவரை சத்தமின்றி காய் நகர்த்தி வந்த சூரஜ் மீது உத்ராவின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால், சூரஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, ஏற்கெனவே மனைவியை பாம்பு கடிக்க செய்து கொல்ல முயற்சித்ததாகவும், ஆனால் எப்படியோ உத்ரா உயிர் பிழைத்துக் கொண்டதாகவும் கூறிய சூரஜ், மீண்டும் அதே பாம்பினை உத்ரா மீது தூக்கிப்போட்டு கடிக்க வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சூரஜையும், கொலைக்கு உடந்தையாக இருந்த பாம்பாட்டி சுரேஷையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments