Saturday, November 26, 2022
Home உலகம் உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு - அமெரிக்க அதிபர் டிரம்ப்

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு – அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்

சீனாவின் ஹூபேய் மாகாணம், வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த வைரசின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளது. எனவே அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தினார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளது. ஆண்டுக்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது. இது தவறு உடனே திருத்திக் கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பினை வலியுறுத்தியும் செவி சாய்க்கவில்லை.

இனி அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது. அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை வேறு சுகாதார அமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- Advertisment -

Most Popular

விழிப்புணர்வு குறும்படம் – வீடு வீடாக குப்பை சேகரிக்கும் நடிகர் யோகி பாபு

சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நடிகர் யோகி பாபுவை தூய்மைப் பணியாளராக நடிக்க வைத்து குறும்படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. இதில், தூய்மைப் பணியாளர்...

மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம் – அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம்

விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் சனிக்கிழமை (நவ.19) அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த...

56 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திவைத்தார்

சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 56 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

லவ் டுடே திரைப்படம் – வசூலில் 50 கோடியை நெருங்கியது

கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இயக்கிய திரைப்படம் லவ் டுடே. இந்த படம் கடந்த நான்காம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன்...

Recent Comments