Thursday, December 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.

ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.

ஏசர் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்போது புதிய ஏசர் ஆஸ்பையர் 7 கேமிங் லேப்டாப் மாடலை சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக விலைக்கு தகுந்தபடி பல்வேறு புதிய தொழில் நுட்பங்களுடன் இது வெளிவந்துள்ளது.

புதிய ஏசர் ஆஸ்பையர் 7 கேமிங் லேப்டாப் மாடல் ஆனது 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த  லேப்டாப் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

ஏசர் ஆஸ்பையர் 7 கேமிங் லேப்டாப் சாதனம் இன்டெல் 9-வது ஜெனரல் கோர் சிபியுக்களைக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஏஎம்டி பதிப்பில் ரைசன் 3000 தொடர் சிபி யுக்கள் பொருத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஏசர் லேப்டாப் மாடல் ஆனது பிரத்யேக என்விடியா ஜிடிஎக்ஸ் தொடர் கிராபிக்ஸ் அட்டையைக் கொண்டுள்ளது,மேலும் டிடிஆர் 4 ரேம் மற்றும் 1 டிபி வரை மெமரி என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லேப்டாப்.

வைஃபை 6, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் ஏசரின் ட்ரூஹார்மனி ஆடியோ தொழில்நுட்பமும் ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடலில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் மென்பெருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடல் முழு எச்டி டிஸ்ப்ளே 81.61 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் மற்றும் சராசரியாக 2.15 கிலோ எடையுடன் வெளிவந்துள்ளது.

ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடல் ரூ.54,990-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கும். விரைவில் ஏசர் இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோரிலும் ஏசர் ஆஸ்பையர் 7 கேமிங் லேப்டாப் மாடல் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments