Wednesday, March 29, 2023
Home தமிழகம் சென்னையை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்

சென்னையை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்

ஜூன் 19-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வரும் நிலையில், சென்னையிலிருந்து வெளியேறும் மக்களால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலுள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு பொதுமுடக்கம் வரும் ஜூன் 19-ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதனால் சென்னையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய போலீசாருக்கு செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார்.
 
இதையடுத்து வண்டலுார், பரனுார், ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களையும் கடுமையாக சோதிக்கின்றனர். இ-பாஸ் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே பிற மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றது. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதுதவிர உரிமம் இல்லாத, தலைக்கவசம், முகக்கவசம் இல்லாமல் வரும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். தற்போது வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையே சென்னையில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளன. இதனால் செங்கல்பட்டின் பரனூர் சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. பெரும்பாலானோர் கணிசமான தொகையைக் கொடுத்து இருசக்கர வாகனத்திலும், ஆட்டோவிலும் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வரை செல்கின்றனர். பலரும் போலீசார் சோதனையை கண்டதும் பாதி வழியிலேயே திரும்பி செல்கின்றனர். இன்று மட்டும் காலையில் இருந்து தற்போது வரை 50க்கும் மேற்பட்ட வாகனங்களை செங்கல்பட்டு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments