டெல்லி
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அங்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த புதன்கிழமை அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ராஜீவ் காந்தி சூப்பர் மல்டி ஸ்பெஸாலிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு நுரையிரல் பாதிப்புடன் கடுமையான நிமோனியாவும் பாதித்துள்ளது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதையடுத்து அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஜெயின் உடல் நிலை தொடர்ந்து மோசடைந்து வருகிறது. இதையடுத்து அமைச்சர் சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள மேக்ஸ் என்ற தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். அங்கு அவருக்கு பிளாஸ்மாக சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது