Friday, March 24, 2023
Home பொது பனை மரத்து உச்சியில் உயிருக்கு போராடி உயிரிழந்த பனை மர தொழிலாளி

பனை மரத்து உச்சியில் உயிருக்கு போராடி உயிரிழந்த பனை மர தொழிலாளி

தூத்துக்குடி

பனை மரத்து உச்சியில் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடி இருக்கிறார் நடேசன்.. அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தும் கடைசியில் அநத் பனை மர தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள பகுதி விஜயநாராயணபுரம்.. இங்கு வசித்து வந்தவர் நடேசன், வயது 63. இவர் ஒரு பனை மர தொழிலாளி. கிருஷ்ணகுமார் என்பவரது தோட்டத்தில் நடேசன் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், பதனீர் இறக்க போகிறேன் என்று வீட்டில சொல்லிவிட்டு கிளம்பி போயுள்ளார் நடேசன். ஆனால் ரொம்ப நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி கணவரை தேடி தோட்டத்துக்கு போனார். அப்போது பனை மரத்தின் உச்சியில் நடேசன் தொங்கி கொண்டிருந்தார். பனை மட்டைகளுக்கு இடையே அரை மயக்கத்தில் கிடநத்தை கண்டு அலறினார் மனைவி, சத்தம் கேட்டு அங்கிருந்தோர் ஓடி வந்தனர். அதில் சக பனை தொழிலாளி ஒருவர் மரம் ஏற முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை.

அதனால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. அவர்களும் விரைந்து வந்தனர். ஆனால், அந்த பனை மரம் ஏற அவர்களிடம் அடுக்கு ஏணி வசதி இல்லை. அவர்களில் யாருக்கு.ம் பனை மரம் ஏறும் அளவுக்கு பயிற்சியும் இல்லை. அதனால் ஏணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, பிறகு கயிறு கட்டிக் கொண்டு தீயணைப்பு வீரர்கள்மேலே ஏறினர் . இதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

மயங்கி கிடந்த நடேசனை மீட்டு அதற்குள் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. ஆனல் எவ்வளவோ முயற்சித்தும் நடேசனை காப்பாற்ற முடியவில்லை. கடைசி வரை நினைவு திரும்பாமயே நடேசன் உயிர் பிரிந்துவிட்டது. நடேசனுக்கு என்ன ஆனது? எதனால் பனைமட்டைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டார் என தெரியவில்லை. பல வருடமாக பனை மரம் ஏறும் பழக்கப்பட்ட தொழிலாளிக்கு மரம் ஏறுவதில் பிரச்சனை இருந்திருக்காது என்றே தெரிகிறது.

ஆனாலும் ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அதேசமயம், தீயணைப்பு வீரர்களிடம் உயரமான அடுக்குகளை கொண்ட ஏணிகள் கையிருப்பில் இல்லாதது அதிர்ச்சியை தருகிறது. நகர்ப்புறங்களில் இல்லாவிட்டாலும், தென்மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் இந்த “ஸ்கைலிப்ட்” எனப்படும் ஏணிகளை அவசரத்துக்கு கையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments