Saturday, December 2, 2023
Home இந்தியா பதஞ்சலியின் "கொரோனில்" ஆயுர்வேத மருந்துக்கு மத்திய அரசு அனுமதி

பதஞ்சலியின் “கொரோனில்” ஆயுர்வேத மருந்துக்கு மத்திய அரசு அனுமதி

புதுடில்லி

பதஞ்சலி நிறுவனத்தின் ‘கொரோனில்’ ஆயுர்வேத மருந்துக்கு மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த மாதம் 22ம் தேதி பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய “கொரோனில்” என்ற மருந்து குறித்து மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் பல கேள்விகளை எழுப்பியது. அதே நேரம் அதை விளம்பரம் செய்யவும் தடை விதித்தது. இந்நிலையில் கொரோனில் மருந்து கொரோனாவை குணமாக்கும் என்று சொல்லவில்லை என்றும், கொரோனா நோயாளிகள் அதை எடுத்துக் கொண்ட போது, அவர்களுக்கு குணம் கிடைத்தது என்றும் பதஞ்சலி நிறுவனம் நேற்று விளக்கம் அளித்தது.

இதையடுத்து அந்நிறுவனத்தின் ‘கொரோனில்’ மருந்தினை நோய் எதிர்ப்பு சக்தி ஊக்க மருந்தாக மட்டும் விற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இது கொரோனாவை குணமாக்கும் மருந்து என கூறி விற்பனை செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments