Wednesday, April 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாநவீன வசதிகளுடன் 1,068 ஆம்புலன்ஸ்களை களமிறக்கினார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

நவீன வசதிகளுடன் 1,068 ஆம்புலன்ஸ்களை களமிறக்கினார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் அம்மாநிலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இதை உறுதிச் செய்கின்ற வகையில், தற்போதைய கொரோனாவின் இக்கட்டான சூழ்நிலையில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் செய்துள்ளார். உதாரணமாக, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவியளிக்கும் விதமாக அறிவித்த நிதியுதவி திட்டம் நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருந்தது.

இத்திட்டத்தின்படி, சலவைத் தொழிலாளர்கள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையல்காரர்கள் என பல கூலித் தொழிலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன்மூலம் 2.47 லட்சம் பேர் பயனடைந்தனர். இதற்காக 247 கோடி ரூபாயை அவர் நேரடியாக ஒதுக்கி வைத்தார்.

இதுமட்டுமின்றி, கொரோனாவால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கும் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி டிரைவர்களுக்கும் உதவியளிக்கும் விதமாக ரூ.10 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கினார். இவ்வாறு, பல பிரம்மாண்ட திட்டங்களை அவர் மாநில மக்களின் நலனுக்காக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் மற்ற மாநில மக்களையும், மாநில அரசுகளையும் வாயை பிளக்க வைக்கின்ற வகையில் புதிதாக 1,068 ஆம்புலன்ஸ்களை ஆந்திர அரசு களமிறக்கியிருக்கின்றது. இவைனைத்தும், மஹராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபோர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

இந்த நிறுவனத்திடம் இருந்தே உயிர்காக்கும் உன்னத பணியை மேற்கொள்வதற்காக 1,068 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், 130 ஆம்புலன்ஸ்கள் அட்வான்ஸ்ட் உயிர் காக்கும் கருவிகளைக் கொண்ட மாடலாகும். மீதமுள்ள 938 ஆம்புலன்ஸ்களில் 282 ஆம்புலன்ஸ்கள் அடிப்படை பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ்கள் ஆகும். 656 ஆம்புலன்ஸ்கள் கிராமப்புறப் பகுதி மக்களுக்கு உதவியளிக்கும் வகையில் கேம்ப் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் நிறம், கூடுதல் அம்சம் மற்றும் டயல் (104 மற்றும் 108) எண்களின் மூலம் அடையாளம் காண முடிகின்றது.

நாடே கொடிய வைரஸ் கொரோனாவிடம் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில், மக்களைக் காக்கும் பணியில் எந்தவொரு தடங்கலும் ஏற்படாமல் இருப்பதற்காக இத்தகைய அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்தியாவில் எந்தவொரு மாநிலமும் இந்தளவிற்கு அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ்களை களமிறக்கியதில்லை என கூறப்படுகின்றது. ஒட்டுமொத்த நாட்டின் பார்வையும் ஆந்திராவின் பக்கம் திரும்பியுள்ளது. எனவே, ஆந்திர அரசின் வரலாற்றில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய அரசின் வரலாற்றிலுமே மிக முக்கியமான இடத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிடித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, மண்டலத்திற்கு ஒரு 104 மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைக் கொண்டு வரப்படும் என அறவித்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொரோனாவின் இக்கட்டான காலத்தில் 104 மற்றும் 108 ஆகிய டயல் எண் அடையாளங்களைக் கொண்ட உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுகுறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது, “அவசர காலங்களில் பொதுமக்கள் அழைப்பு விடுத்தால், நகர்ப்புறங்களில் 15 நிமிடங்களிலும், கிராமப்புறங்களில் 20 நிமிடங்களிலும், மலைவாழ் கிராமங்களில் 30 நிமிடங்களிலும் ஆம்புலன்ஸ்கள் சென்று சேரும் வகையில் இந்த ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments