ராணுவ வீரர்கள், சமூகவலைதலங்களை பயன்படுத்த தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ அதிகாரி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிக்கப்பட்டு, ராணுவத் தரவுகள் திருடப்படுவதாகக் கூறி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு இந்திய ராணுவம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், நெடுந்தூரத்தில் ஆபத்து நிறைந்த பணியை மேற்கொள்ளும் ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பத்தினர் உடன் தகவல் பரிமாறி கொள்ள சமூகவலைதளங்கள் உதவியாக உள்ளன. அதற்கு தடை விதிப்பது என்பது வீரர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் எனவும், லெப்டினன்ட் கர்னல் சவுத்ரி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.