Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஅரசு பங்களாவில் இருந்து ஆகஸ்ட் 1-க்குள் காலி செய்ய பிரியங்கா காந்தி முடிவு

அரசு பங்களாவில் இருந்து ஆகஸ்ட் 1-க்குள் காலி செய்ய பிரியங்கா காந்தி முடிவு

டெல்லி

அரசு பங்களாவில் இருந்து ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்ய இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவருக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் எஸ்டேட்டுகள் இயக்குநரகம் (The Directorate of Estates) அனுப்பிய நோட்டீஸ், மத்திய உள்துறை அமைச்சகத்தால் எஸ்.பி.ஜி பாதுகாப்பு, இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதை சுட்டிக்காட்டி, அவருக்கான லோதி குடியிருப்பு வீடு ஒதுக்கீடு ஜூலை 1ம் தேதி முதல் ரத்தாவதாகவும், ஆதலால் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரியங்கா விடுத்த கோரிக்கையை ஏற்று, கூடுதல் காலம் அங்கு வசிக்க பிரதமர் மோடி அனுமதி அளித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்த செய்தியை பொய் செய்தி என்று ட்விட்டர் பதிவில் மறுத்துள்ள பிரியங்கா, அரசிடம் கோரிக்கை எதையும் வைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments