Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஇந்தியாவில் 10 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.

இந்தியாவில் 10 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக 34,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது:

கடந்த 24 மணி நேரத்தில் 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,03,832ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 687 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 25,602 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 6,35,757 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 63.3 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,42,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.*

இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 2,84,281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,58,140ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,194ஆக உயர்ந்துள்ளது. 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1,56, 389 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,236 பேர் உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள டெல்லியில் 1,18,645 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,545 பேர் உயிரிழந்துள்ளனர். 4வது இடத்தில் கர்நாடகாவும், 5வது இடத்தில் குஜராத்தும் உள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments