Wednesday, September 11, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுஆந்திர மாநிலத்தில் எறும்புத்தின்னி-யை 65 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற கும்பல் கைது

ஆந்திர மாநிலத்தில் எறும்புத்தின்னி-யை 65 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற கும்பல் கைது

இந்தியாவில் மான், உடும்பு உள்ளிட்ட சில வன விலங்குகளைப் பிடிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உள்ள ஒரு அரிய விலங்கினம்தான் அலுங்கு என அழைக்கப்படும் எறும்புத்திண்ணி எனப்படும் விலங்கு.

உடல் முழுவதும் செதில்களால் இருக்கும் இந்த எறும்புத்திண்ணிகளை கொண்டு சில அரியவகை மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும், சீனா உள்ளிட்ட நாடுகளில் இதை விரும்பி சாப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இவற்றைக் கள்ள மார்க்கெட்டில் வாங்கி விற்க ஒரு கூட்டம் உள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் உள்ள எத்லப்பாடு வனப்பகுதியில் இருந்து அலுங்கு ஒன்றை பிடித்த 3 நபர்கள் அதனை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய முயன்றனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் வரவே அவர்கள் வாடிக்கையாளர்கள் போல பேசியுள்ளனர். 65 லட்சத்துக்கு வாங்கிக் கொள்வதாக சொல்லி சென்று மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments