Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழகத்தில் உச்சத்துக்கு செல்லும் கொரோனா - ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று

தமிழகத்தில் உச்சத்துக்கு செல்லும் கொரோனா – ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று

சென்னை

தமிழகத்தில் இன்று (ஜூலை 19) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆகவும், பலி எண்ணிக்கை 2,481 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று 4,979 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,902 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 77 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 112 ஆய்வகங்கள் (அரசு-57 மற்றும் தனியார்-55) மூலமாக, இன்று மட்டும் 52,993 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 19 லட்சத்து 32 ஆயிரத்து 492 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,937 பேர் ஆண்கள், 2,042 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 907 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 66,763 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,059 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 915 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 78 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 55 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,481 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 50,294 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments