சீனாவில் இருந்து இயங்கும் 87 ஜப்பானிய நிறுவனங்களை சீனாவை விட்டு வெளியேறுமாறு ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக அந்நிறுவனங்களுக்கு பொருளாதார உதவியாக சுமார் 653மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை ஜப்பான் அரசு கொடுக்க உள்ளது, ஆனால் இந்த நிதிக்காக ஜப்பான் அரசு சுமார் 2.2பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதி உதவியை ஏற்கனவே பல நிறுவனங்கள் பெற்றுள்ள நிலையில் வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன. அதிகபட்சமாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில்தான் புதிதாக தொழில் தொடங்கி உள்ளன.
இதன்படி ஹோயா எனும் கணிணி ஹார்ட் டிஸ்க் தயாரிப்பு நிறுவனம் வியட்நாம் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளை தேர்வு செய்துள்ளது, சுமிட்டோமோ ரப்பர் தொழிற்சாலை மலேசியாவிலும், ஷின் எட்ஸூ வேதியியல் நிறுவனம் வியட்னாமிற்கும் இடம் பெயர்ந்துள்ளன.
ஜப்பான் அரசின் இந்த நடவடிக்கை சீனாவின் பொருளாதாரத்தை சேதப்படுத்த முயலும் நடவடிக்கை ஆகவே பார்க்கப்படுகிறது.