Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் ராமர் கொரோனாவை அழித்து விடுவார்! - ராமேஸ்வர் சர்மா...

ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் ராமர் கொரோனாவை அழித்து விடுவார்! – ராமேஸ்வர் சர்மா பா.ஜ .க

குவாலியர்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் கடவுள் ராமர் கொரோனாவை அழித்துவிடுவார் என்று பா.ஜ.க தலைவர் ராமேஸ்வர் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் சர்ச்சைக்குள்பட்டிருந்த 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக “ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை” அமைக்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார்.

அயோத்தியில் தற்போதுள்ள ராமர் கோவில் பகுதியில் கடந்த மே மாதம் 11-ஆம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் ஜூலை 2-ஆம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் பகவான் ராமர் பிறந்த இடத்தில் பூமி பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அன்று பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என செய்திகள் வெளியானது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச சட்டப்பேரவை சபாநாயகரும் பா.ஜ.க தலைவருமான ராமேஸ்வர் சர்மா குவாலியரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் பகவான் ராமர் பிறந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் போது உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரமான கொரோனா வைரஸின் முடிவின் ஆரம்பமாகும்.

“பகவான் ராமர் மனிதகுலத்தின் நலனுக்காகவும், அப்போது அரக்கர்களை அழிக்கவும் மறுபிறவி எடுத்தார். ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் கொரோனா தொற்று நோய்களின் அழிவும் தொடங்கும்” என்று சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சமூக இடைவெளியை பராமரிப்பது மட்டுமல்லாமல், நமது புனித நபர்களை நினைவில் கொள்கிறோம். உச்ச நீதிமன்றமும் ராமர் கோவில் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளது,” என்று கூறினார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நிகழ்ச்சியின் போது அனைத்து சமூக இடைவெளி விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும், இந்த விழாவில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments